tamilnadu

img

ரிசர்வ் வங்கி ரூ.25,000 கோடிக்கு கடன் பத்திரிக்கை வாங்க திட்டம்

இந்திய ரிசர்வ் வங்கி, வெளி சந்தையில் ரூ.25,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வரும் மே மாதத்தில், இரு தவணைகளாக வாங்க திட்டமிட்டுள்ளது.

இதில் முதல் கட்டமான நிதித் திரட்டலை 2019 - 2020-ஆம் நிதியாண்டில் மே 2- ம் தேதி 12,500 கோடியை வெளி சந்தையில் (ஓஎம்ஓ) வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இரண்டாவது தவணை குறித்த தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த 2018-ல், ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு, பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும் நிதிக் கொள்ளை குழு, இரு முறை கூடியது. இதில் இரு முறையும் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை தலா 0.25 சதவிகிதம் குறைத்தது.

ஆனால் இந்த வட்டி குறைப்பில், முழு பலன் அளிக்கவில்லை. பெரும்பாலான வங்கியில், கடன்களுக்கான வட்டி குறைப்பு செயல்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. சில வங்கிகள் மட்டுமே அதுவும் குறைந்த வட்டி விகிதத்தை குறைத்தன. மேலும், வாராக்கடனின் மதிப்பை குறைப்பதற்காக வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. ரிசர்வ் வங்கி இரு முறை வட்டி விகிதத்தை குறைத்தும், மக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் எந்த பலனும் இல்லை என்பதே உண்மையான நிலைமை. 

இதை அடுத்து, பொருளாதாரமும் நினைத்த அளவு இல்லாத காரணத்தால், ரிசர்வ் வங்கி வெளி சந்தைகளில் இருந்து கடன் பத்திரங்களை வாங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கடன் பத்திரங்கள் வாயிலான பெறும் முதலீடு மூலம் பணப்புழக்கமும் அதிகரிக்கும். இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என கருதுகிறது.


;